கர்நாடகத்தில் கன மழை- நிரம்பும் அணைகள் மேட்டூருக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு
மேட்டூர்:கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை நீடித்து வருகிறது. இதனால் கபிணி, ஹேமாவதி ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன. இதையடுத்து அந்த அணைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹேமாவதி அணையின் மொத்த நீர் மட்டம் 2,922 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 5 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 32 ஆயிரம் கன நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 41 ஆயிரத்து 987 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 6,668 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் ெகாண்டுள்ளது.
அணையின் நீர் மட்டம் 115.20 அடியாக உள்ளது. மொத்த நீர் மட்ட அளவு 124.80 அடியாகும்.
இதேபோல கபிணி அணையின் நீர்மட்டமும் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 2,284 அடி நீர் மட்டத்தில் தற்போது அணையில் 2,282 அடியாக நீர்இருப்பு உள்ளது.
கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதாலும் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதாலும், தமிழகத்திற்கு அதிக அளவிலான காவிரி நீர் வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ளது.
90 அடியை நீர் மட்டம் தாண்டியவுடன் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications