நக்ஸல் வேல்முருகன் சட்டக் கல்லூரியிலிருந்துடிஸ்மிஸ்: மதுரையில் விஜய்குமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:பெரியகுளம் பகுதியில் பிடிபட்ட நக்ஸலைட்டுகளில் ஒருவரான மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வேல்முருகன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வேல்முருகன் குறித்து முழுமையாக விசாரிக்க ஏஜிடிபி விஜயகுமார் மதுரை வந்துள்ளார்.

பெரியகுளம், முருகமலை பகுதிகளில் பிடிபட்ட நக்சலைட்டுகளில் வேல்முருகன் என்பவர் கும்பக்கரையை சேர்ந்தவர். இவர் மதுரை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தக் கல்லூரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று 2ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந் நிலையில் அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் இன்று காலை திடீரென மதுரைக்கு வந்தார்.

வேல்முருகன் கொடுத்த ஏதோ முக்கிய தகவலை பற்றி விசாரிக்கவே அவர் மதுரை வந்துள்ளதாகத் தெரிகிறது.

வேல்முருகன் டிஸ்மிஸ்:

இதற்கிடையே வேல்முருகன் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

வேட்டையில் ரிட்டையர்டு போலீஸ்:

இதற்கிடையில் நக்சல் தீவிரவாதிகள் வேட்டையில், வீரப்பன் வேட்டையின் போது உடனிருந்து பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளையும், திறமை வாய்ந்த போலீஸாரையும் ஈடுபடுத்த விஜயகுமார் லிஸ்ட் தயார் செய்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+