95 வயது கணவன் இறந்த துக்கத்தில் 85 வயது மனைவி சாவு!
Subscribe to Oneindia Tamil
தென்காசி:கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார்.
தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியைச் சேர்ந்தவர் உலகநாதன் (95). இவரது மனைவி மாடத்தி அம்மாள் (85). இவர்களுக்கு இரண்டு மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் உலகநாதன் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் அருகே இருந்து மாடத்தி அம்மாள் கதறி அழுதார். உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவரால் கணவனின் இழப்பை தாங்க முடியவில்லை.
தொடர்ந்து அழுத அவர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மாடத்தி அம்மாளும் உயிரிழந்துவிட்டார்.
கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த செய்தி அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications