பெற்றோரை கொன்ற மகன்-மரத்தில் கட்டி வைத்து அடி, உதை!!

Subscribe to Oneindia Tamil

சேந்தமங்கலம்:பெற்ற தாயை கொன்ற மகனை, ஊர்மக்கள் சேர்ந்து அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மூளை பாதிப்பு உள்ளவர் தெரியவந்துள்ளது.

சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சாமிதுரை, இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் ராமநாதபுரம்புதூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலில் இயக்குநர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த இவர் அங்குள்ளவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவரை தந்தை முத்தப்ப உடையார் கண்டித்தார்.

Samidurai

இந் நிலையில் நேற்று காலை கடப்பாரையுடன் வந்த சாமிதுரை தன் தந்தையையும், தாயையும் கடப்பாரையால் குத்திக் கொன்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கவிதா தன் குழந்தைகளுடன் அருகே இருந்த எம்.எல்.ஏவின் தோட்டத்தில் போய் மறைந்து கொண்டனர். ஆனால் சாமிதுரை அங்கும் சென்று அவர்களை தேடிப் பார்த்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது சகோதரி இந்திராணி தட்டி கேட்க வந்தார். அவருக்கும் கடப்பாரை அடி விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கப்பட்டு விழுந்துவிட்டார்.

இதையடுத்து சாமிதுரையை தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். அவரை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு போலீஸூக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரித்தபோது சாமிதுரை சமீபத்தில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. இதில் சரியாக சிகிச்சை எடுக்காததால் அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் இந்த வெறிச் செயலை செய்தது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+