95 அடிக்கு வந்ததும் மேட்டூர் அணைதிறக்கப்படுமா?: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை:மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95 அடி உயர்ந்ததும், பாசனத்திற்காக அணை திறக்கப்படுமா என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]() |
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.கருப்பன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மேட்டூர் அணைய பாசனத்திற்காக திறக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், அணையின் நீர் மட்டம் 95 அடியாக உயர்ந்ததும் அணை திறக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கருப்பனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந் நிலையில், வருகிற 25ம் தேதி அணை திறக்கப்படும் என அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து வழக்கறிஞர் கருப்பன் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்பு ஆஜராகி, மேட்டூர் அணையின் தற்போதைய நீர் மட்டம் 93.8 அடியாக உள்ளது. இன்றைக்குள் 95 அடியாக நீர்மட்டம் உயர்ந்து விடும்.
ஆனால் பாசனத்திற்காக 25ம் தேதிதான் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு எதிரானது என்றார்.
இதையடுத்து 95 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தவுடன் மேட்டூர் அணை திறக்கப்படுமா, இல்லையா என்பதை இன்றைக்குள் அரசிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை













Click it and Unblock the Notifications