தமிழகத்தில் 6000 கி.மீ நெடுஞ்சாலைகள்இரட்டை வழி பாதைகளாகின்றன
திருவள்ளூர்:தமிழகத்திலுள்ள 9,526 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையில் 6,000 கி.மீ சாலையை இரட்டை வழி பாதைகளாக (two-lane) விரிவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் கூறியுள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
கடந்த வருடம் 1,320 கி.மீ அளவிலான சாலைகள் இரட்டை வழிச் சாலைகளாக மாற்றப்பட்டன.
இந்த வருடம் மேலும் 1,320 கி.மீ தூரமுள்ள சாலைகளை, ரூ.729 கோடி செலவில் இரட்டை வழி சாலைகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.60 கோடி செலவில் கடம்பத்தூர், திருவலங்குடி, அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான அளவீடுகள் முடிந்த பின் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
படிப்படியாக 6,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் இரட்டை வழிப் பாதைகளாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications