ஒகேனக்கலில் விஜய்குமார்-தீவிர நகசல் வேட்டை
ஒகேனக்கல்:ஏடிஜிபி விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படையினர் ஒகேனக்கல் காட்டுப் பகுதிகளில் தீவிர நக்சல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல் வந்த விஜயகுமார் கடந்த காலத்தில் தர்மபுரியில் நக்சல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வனப் பகுதிகளில் நடந்து வரும் குற்றங்கள் குறித்தும் அப் பகுதி போலீசார் மற்றும் அதிரடிப்படையினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் டி.எஸ்.பி சிங், இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் தலைமையில் தனிப் படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டார். அதிரடிப்படை போலீஸாருடன் இவர்கள் காட்டுப் பகுதியில் புகுந்துள்ளனர்.
அதே போல விஜயகுமாரும் தனது தலைமையில் ஒரு படையினருடன் வனப் பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் இறங்கினார். அஞ்செட்டியிலல் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமுக்கும் விஜயகுமார் சென்றார்.
பேனர், போட்டோவுடன் வேட்டை:
வனப் பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களிடமும், மலைவாசிகளிடமும் தப்பியோடிய நக்சல்களின் போட்டோவை காட்டியும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அவர்களது புகைப்பட பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
பிடிபட்ட நக்ஸலைட் சுந்தரமூர்த்தியின் மனைவி சந்திரா, பிரசாந்த், தமிழ்வாணன், வெங்கடகிரி, காளிதாஸ் ஆகியோரின் படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இதில் தமிழ்வாணன் 1989-1995 ஆண்டுகளில் பாரூர், மத்தூர் பகுதிகளில் நடமாடியவர். சந்திரா, நவீன் என்ற பிரசாந்த் ஆகியோர் 2002ல் ஊத்தங்கரை பகுதியில் ஆயுதப் பயிற்சி எடுத்துவிட்டு தப்பிச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications