சத்துணவில் வாரம் 3 முட்டை திட்டம்:தொடங்கி வைத்தார் கருணாநிதி
சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
![]() |
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, பூங்கோதை, மதிவாணன், கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்தனர்.
காமராஜர் பிறந்த நாள் கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்திருந்ததால் இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருந்தன. கல்வி எழுச்சி நாள் விழா இன்று பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
இன்றைய நாளில் வாரம் 3 முறை சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதையொட்டி சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, குழந்தைகளுக்கு முட்டை மற்றும் சர்க்கரைப் பொங்கலை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்













Click it and Unblock the Notifications