முகம்மது ஹனீப் ஜாமீனில் விடுதலை
பிரிஸ்பேன்:
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்புக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜூன் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத செயல்கள் தொடர்பாக ஜூலை 2ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த, டாக்டர் முகம்மது ஹனீப், பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்டார்.
![]() |
12 நாள் போலீஸ் காவலில் இருந்த அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹனீப்.
இந்த நிலையில் ஹனீப் சார்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஹனீப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வழக்கு முடியும் வரை தினசரி நீதிமன்றத்தில் ஹனீப் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஹனீப்புக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கிடையே தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட ஹனீப்பின் உறவினரான டாக்டர் சபீல் அகமது இன்று அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்













Click it and Unblock the Notifications