தீவிபத்தில் கருகிய 94 குழந்தைகள்:கும்பகோணத்தில் கண்ணீர் அஞ்சலி
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட கொடூர தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிருடன் கருகிப் பலியான சம்பவத்தின் 3வது ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்று கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 94 சிறு குழந்தைகள் அநியாயமாக கருகிப் பலியாகின.
![]() |
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி கும்பகோணத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடம் முன்பு சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 94 குழந்தைகளின் படங்களும் பெரிய பேனரில் வைக்கப்பட்டு அவற்றுக்கு பொதுமக்கள், குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குழந்தைகளின் சமாதிகளிலும் குடும்பத்தினர் படையல் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இரங்கல் பேரணிகளும் நடத்தப்பட்டன.
94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீக்காய சிகிச்சைப் பிரிவும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மாலையில், கும்பகோணம் மகாமக குளத்திற்கு அருகே இரங்கல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications