100 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை!
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 100 அடியைத் தாண்டியது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரித் தாய்க்கு நன்றி கூறி சிறப்புப் பூஜை செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபிணி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகியவை நிரம்பி விட்டன.
இதையடுத்து இந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை அணையின் நீர் மட்டம் 100 அடியைத் தொட்டது. கிட்டத்தட்ட 190 நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடி ஆனது.
இதையடுத்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் மேட்டூர் அணையில் சிறப்புப் பூஜை நடத்தினர். தேங்காய் உடைத்து, சூடம் காட்டி, மலர்கள் தூவி காவிரித் தாய்க்கு நன்றி கூறி வணங்கினர்.
இன்று காலை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி 100.68 அடியாக இருந்தது. காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 32 ஆயிரத்து 648 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து திருப்திகரமாக உள்ளதால் இன்னும் சில தினங்களில் முழுக் கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications