சென்னையிலிருந்து கேரள சென்ற இருவரை தாக்கி11 கிலோ தங்கம் கொள்ளை- மதிப்பு ரூ. 1 கோடி!!
கோழிக்கோடுசென்னையில் இருந்து சென்ற இரு தங்க வியபாரிகளை பின்தொடர்ந்து வந்து தாக்கி 11 கிலோ தங்கக் கட்டிகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.
அஷ்ரப் (30), முகமது அலி(28) ஆகியோர் கேரளத்தில் குஞ்சு மொய்தீன் என்ற நகைக் கடைக்காரருக்கு கொடுப்பதற்காக சென்னையில் சுந்தர் சேட் என்பவரிடமிருந்து 11 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றனர். அதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
சென்னையிலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸில் பயணித்த இவர்கள் தங்கக் கட்டிகள் அடங்கிய 2 சூட்கேஸ்களுடன் ஒற்றைப்பாலம் என்னுமிடத்தில் இறங்கி, கோழிக்கோடு செல்லும் பஸ்ஸில் ஏறினர்.
இவர்கள் சென்ற பஸ்ஸை கார் ஒன்று வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய 9 பேர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பஸ்சில் ஏறினர். பிற பயணிகள் யாரையும் தாக்காமல், அஷ்ரப் மற்றும் முகம்மது அலி ஆகியோரை மட்டும் தாக்கிவிட்டு தங்க கட்டிகள் இருந்த சூட்கேஸ்களை பறித்துக் கொண்டு காரில் ஏறித் தப்பிவிட்டனர்.
கொள்ளை போன தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும்.
இதையடுதது டிரைவர் பஸ்ஸை சொர்ணூர் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து முகமது அலியும், அஷ்ரபும் போலீஸில் புகார் செய்தனர்.
சென்னையிலிருந்தே இந்த இருவரையும் கொள்ளைக் கும்பல் தொடர்ந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கொள்ளைபோன தங்கக் கட்டிகளுக்கு சரியான கணக்கு வழக்கு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்தும் வருகின்றனர். மேலும் அலிக்கும் அஷ்ரபுக்கும் கொள்ளைக் கும்பலுக்கும் இடையே தொடர்பு உள்ளதா, இவர்கள் நாடகமாடி சுந்தர் சேட்டை ஏமாற்ற முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications