ஒற்றை ஜடையில் வந்ததால் ஆத்திரம்:மாணவி முடியை வெட்டிய ஆசிரியை
சென்னை:சென்னை அருகே இரட்டை ஜடை போடாமல் ஒற்றை ஜடையில் வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை, மாணவியின் முடியை வெட்டித் தள்ளினார்.
சென்னை அருகே உள்ள மறைமலைநகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுலட்சனா என்ற மாணவி படித்து வருகிறார்.
![]() |
பள்ளியில் மாணவிகள் ஒற்றை ஜடை போடக் கூடாது என்று உத்தரவு உள்ளதாம். ஆனால் சுலட்சணா மறந்து ஒற்றை ஜடையில் பள்ளிக்கு வந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது வகுப்பு ஆசிரியை ஷகீலா, சுலட்சணாவின் ஜடையை கத்திரிக்கோலால் கரகரவென அறுத்து கையில் கொடுத்து இனிமேல் ஒற்றை ஜடையில் வந்தால் இதுதான் கதி என்றும் எச்சரித்துள்ளார்.
அவமானமடைந்த மாணவி சுலட்சணா, அழுதபடி வெட்டிய முடியுடன் வீடு திரும்பினார். பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வேலைக்கு நியமிக்கப்பட்டவராம். எனவே தங்களால் அவரை வேலையிலிருந்து நீக்க முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர் இன்று பள்ளிக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications