மேட்டூர் அணை நீர் மட்டம் 103.6 அடி:பவானி சாகர் அணை திறப்பு
மேட்டூர்:மேட்டூர் ஸ்டான்லி அணையின் நீர் மட்டம் 103.6 அடியை எட்டியுள்ளது.
பவானி சாகர் அணையிலும் நீர்மட்டம் 100 அடியை தொட்டது. இதையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி விட்டன. இதனால் உபரி நீரை காவிரியில் திறந்துவிட்டுள்ளது அந்த மாநிலம்.
இந்த நீர் மேட்டூரை அடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 103.6 அடியாக இருந்ததாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைக்கு தொடர்ந்த நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விநாடிக்கு 41.873 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 104 அடியை தொட்டுவிடும்.
இதற்கிடையில் இன்று காலை கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த நீர் நாளை மேட்டூரை வந்தடையும். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும்.
இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளம் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானி சாகர் திறப்பு:
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஈரோடு பவானி சாகர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையை போலவே 120 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் நீர்மட்டம் இன்று காலை நீர் மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
இதனால் 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications