தாயை திட்டிய மாணவனுக்கு தீ வைத்த சிறுவன்!
கோவை:தாயை திட்டியதால் ஆத்திரமடைந்த சிறுவன் உடன் படிக்கும் மாணவனை மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தான்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையத்தை சேர்ந்தவர் காந்தராஜின் மகன் கோகுலகிருஷ்ணன் (10).
![]() |
அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் அன்பரசு (10). இருவரும் அந்தப் பகுதியிலுள்ள அரசு துவக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி இரவு கோகுல கிருஷ்ணன் தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தான்.
இதைப் பார்த்து பதறிய பெற்றோர் அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று வரை கோகுலகிருஷ்ணன் சுய நினைவு இல்லாமல் இருந்தான்.
தீவிர சிகிச்சைக்கு பின் சிறுவனுக்கு சுய நினைவு திரும்பியது. இதையடுத்து போலீஸார் அவனிடம் விசாரணை செய்தனர்.
அப்போது கோகுலகிருஷ்ணன் சொன்ன தகவல் போலீசாரையே அதிர வைத்துவிட்டது. அவன் கூறுகையில்,
கடந்த 7ம் தேதி நானும், பக்கத்து வீட்டில் இருக்கும் அன்பரசுவும் சண்டை போட்டோம். அதை அன்பரசு தனது அம்மாவிடம் போய் சொல்லி விட்டான்.
அன்பரசுவை அடித்ததற்காக அவனுடைய அம்மா என்னை வீட்டுக்கு வந்து அடித்தார். அடிக்கும்போது நான் அன்பரசுவின் அம்மாவை திட்டிவிட்டேன்.
அவர் போனபிறகு அன்பரசு கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து என் அம்மாவையா திட்டுனாய் என கத்திக் கொண்டு என்மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து விட்டான்.
அவனிடமிருந்த தப்பிக்க முயன்றும் முடியவில்லை. தீக்காயமடைந்த நான் மயக்கமடைந்து விட்டேன் என கோகுலகிருஷ்ணன் போலீஸிடம் கூறினான்.
கோகுலகிருஷ்ணன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து சிறுவன் அன்பரசுவை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
அவனை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.













Click it and Unblock the Notifications