மாணவியிடம் வக்கிரம்-ஆசியருக்கு எதிராக பேராட்டம்

Subscribe to Oneindia Tamil

கரீம்நகர் (ஆந்திரா):ஆந்திராவில் பள்ளி மாணவியின் கைகளைத் தூக்கச் சொல்லி வக்கிரப் பார்வை பார்த்தோடு மட்டுமல்லாமல், அந்த மாணவியைக் கட்டிப் பிடித்து முத்தமிட முயன்ற ஆசிரியரை டிஸ்மிஸ் செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கரீம் நகர் மாவட்டம் காட்டுக்கார் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மஞ்சு என்ற மாணவி பிளஸ் ஒன் படித்து வருகிறார்.

இவரது வகுப்பு ஆசிரியராக இருப்பவர் ரவீந்திர ராவ். மாணவி மஞ்சுவை அடிக்கடி வக்கிர பார்வை பார்ப்பாராம் ராவ். அது மட்டுமல்லாமல், அடிக்கடி அவரைத் தேவையில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசுவாராம்.

சில நாட்களுக்கு முன்பு மஞ்சு, ஆசிரியர் ராவ் கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவரது இரு கைகளையும் தூக்கியபடி நிற்க உத்தரவிட்டார் ராவ். பின்னர் மாணவியின் அருகே சென்று வக்கிரத்துடன் பார்த்தபடி நின்றுள்ளார். பின்னர் மாலையில் என்னை வந்து சந்திக்க வேண்டும் என மஞ்சுவுக்கு உத்தரவிட்டார்.

மஞ்சுவும் மாலையில் வகுப்பு முடிந்த பின்னர் ஆசிரியரைப் பார்க்க அவரது அறைக்குச் சென்றார். அபபோது மஞ்சுவைக் கட்டிப் பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ராவ்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஆசிரியரை அடித்து கீழே தள்ளி விட்டு வீட்டுக்கு ஓடியுள்ளார். அங்கு போய் ஆசிரியர் செய்த அசிங்கத்ைதக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து மஞ்சுவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் பள்ளிக்குத் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

ராவ் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+