மும்பை குண்டுவெடிப்பு-மேலும் 3 பேருக்கு தூக்கு
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மேலும் 3 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இத்துடன் இதுவரை 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு மும்பை மாநகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது.
இந்த வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்குப் படிப்படியாக தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முக்கிய திருப்பமாக அப்துல் கனி டர்க், முகம்மது முஷ்டாக் தரணி, பர்வேஷ் ஷேக் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மேலும் 3 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்ற நீதிபதி பி.டி.கோடே தீர்ப்பளித்தார்.
ஷானவாஸ் குரேஷி, அஸ்கர் முகதம், முகம்மது சோயப் கன்சார் ஆகியோருக்கு இன்று தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. குரேஷியும், முகதமும் டைகர் மேமனின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவர்.
இவர்கள் இருவரும் தாதர் பகுதியில் உள்ள பிளாசா தியேட்டரில் ஆர்.டி.எக்ஸ் குண்டை வைத்தனர். இந்த சம்பவத்தி்ல 11 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல கன்சார், ஜவேரி பஜாரில் குண்டு வைத்தார். அதில் 17 பேர் உயிரிழந்தனர், 57 பேர் காயமடைந்தனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை 6 பேருக்குத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications