மேட்டூர் நீர் மட்டம் 115 அடியானது:11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்:மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115 அடியை தொட்டுவிட்டது. அணையின் மொத்த கொள்ளவு 120 தான் என்பதால் அணையிலிருந்து அதிக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் காவிரியின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![]() |
நேற்று 107 அடியாக இருந்த நிலையில் அணை காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்டது. வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
அணைத்து வினாடிக்கு 1.27 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் இன்று பிற்பகலில் அணையின் நீர் மட்டம் 115 அடியாக உயர்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 120 அடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் இருந்து அதிக நீர் வந்து கொண்டுள்ளதால் அணை நாளைக்குள் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணை நிரம்பினால் அதிக அளவில் நீர் வெளியேற்றப்படும். இதனால் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தஞ்சை, நாகை, கடலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர்.
சம்பா நெல் பயிரிடும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications