காங்கிரசில் அடுத்த கோஷ்டி ரெடி!-தலைவர் கார்த்திக் சிதம்பரம்
சென்னை:தமிழக காங்கிரசில் ஜி.கே.வாசனுக்கு எதிராக இன்னொரு கோஷ்டி உதயமாகிறது.
காங்கிரஸில் இருந்து கொண்டே தமிழ் மாநில காங்கிரஸ் என ஆரம்பித்து ஜி.கே.மூப்பனார் ஒரு கலக்கு கலக்கினார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இப்போது வாசனுக்கு எதிராக கொடி பிடிக்க தயாராகிவிட்டார்.
ஏகப்பட்ட கோஷ்டிகளுக்கு மத்தியில் கார்த்திக் தலைமையில் புதிய கோஷ்டி முளைத்துவிட்டது. தமிழக காங்கிரஸில் ஒவ்வொரு கோஷ்டியும் ஏதாவது ஒரு கோஷ்டியை எதிர்க்கும். அதே நேரத்தில் தேவைப்பட்டால் கோஷ்டிகளில் சில தங்களுக்குள் கூட்டு சேர்ந்து அடுத்த கோஷ்டியை எதிர்க்கும்.
இந் நிலையில் வாசனின் அதிகாரம் தமிழக காங்கிரசில் கொடி கட்டிப் பறப்பதைத் தடுக்க அவருக்கு எதிராக பலர் போர்க்கொடியுள்ளனர். இதில் புதிதாக சேர்ந்துள்ள கார்த்திக் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக அவர் அனுப்பியுள்ள அழைப்பிதழில்,
அகில இந்திய அளவில் காங்கிரசை பலப்படுத்தவும், அன்னை சோனியாவின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் கிராமம் தோறும் மக்களிடையே பிரச்சாரம் செய்து காங்கிரசை பலப்படுத்தவும் நடக்கப் போகும் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் மற்றும் மாநகரச் செயலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட முக்கியமான தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வாசன் தரப்புக்கு எதிரானவர்கள் இக் கூட்டத்தில் பங்கற்கலாம் எனத் தெரிகிறது.
அது சரி, ப.சிதம்பரம் தலையாட்டாமலா, வால் ஆடும்?
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications