கலாமின் விளக்கவுரையுடன் திருக்குறள்- விரைவில் வெளியீடு
டெல்லி:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விளக்கத்துடன் கூடிய திருக்குறள் நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையம் இந்த திருக்குறளை உருவாக்கியுள்ளது. 400 திருக்குறள்களை தேர்வு செய்து அவற்றுக்கு கலாம் பொழிப்புரை எழுதியுள்ளார். இந்த திருக்குறள் நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது. கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையத்தைச் சேர்ந்த குழு நேற்று இதுதொடர்பாக கலாமை டெல்லியில் சந்தித்துப் பேசியது.
பின்னர் குழுவின் தலைவர் டாக்டர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூலை எழுதி முடித்து விட்டதாக கலாம் தெரிவித்தார் என்றார் அவர்.
கலாமின் பதவிக்கலாம் வருகிற 24ம்தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் கலாம் பொழிப்புரையுடன் கூடிய திருக்குறள் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.
திருக்குறள் மீது தீராப்பற்று கொண்டவர் கலாம். தனது பேச்சுக்களின்போது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது அவரது வழக்கம். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் கூட குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார் கலாம்.
கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையம், கலாமுக்கு பஞ்சலோகத்தால் ஆன திருவள்ளுவர் சிலையைப் பரிசாக அளித்தது. 133 கிலோ எடை கொண்ட அந்த சிலையை குடியரசுத் தலைவர் மாளிகையின் வரவேற்பு அறையில் 2004ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நிறுவினார் கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications