லஞ்சம் தராததால் பிரசவம் பார்க்காதஅரசு மருத்துவமனை- பெண் பலி
திருப்பத்தூர்:வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்டு ஊழியர்களும் டாக்டர்களும் இழுந்தடித்ததால் அந்தப் பெண் பரிதாபமாக பலியானார்.
திருப்பத்தூர் வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுமுககத்தின் மனைவி லட்சுமிக்கு(26) நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து மாலை 4 மணியளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வலியால் துடித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் யாரும் முன் வராமல் காலம் தாமதம் செய்துள்ளனர். பிரசவ சீட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால், பிரசவ சீட்டு தராமல் ஊழியர்கள் கால தாமதம் செய்தனர். காரணம், அவர்கள் கேட்ட லஞ்சத்தை தர ஆறுமுகத்திடம் பணம் இல்லாதது தான்.
கடைசியாக அங்கே இங்கே காசு புரட்டி சித்ரா என்ற மருத்துவமனை ஊழியரிடம் ரூ.500 லஞ்சமாக கொடுத்துள்ளார் ஆறுமுகம். அதன் பின்னர் இரவு 9 மணிக்குத் தான் லட்சுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாம்.
ஆனால், மிக நீண்ட தாமதம் செய்யப்பட்டதால் லட்சுமி இறந்து விட்டார். ஆனால் பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு தான் லட்சுமி இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமியின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நன்னேரி கிராம மக்களும் ஒன்று திரண்டு வந்ததால் நிலைமை மோசமானது.
இதையடுத்து திருப்பத்தூர் போலீஸார் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். லஞ்சம் கேட்டு தன் மனைவியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ஆறுமுகம் கூறினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து உடலை வாங்கிச் சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications