மனைவியை வீட்டில் சிறை வைத்த கணவன்:எஸ்எம்எஸ் மூலம் போலீஸ் மீட்டது
ஈரோடு:வீட்டில் சிறை வைக்கப்பட்ட புதுப்பெண் எஸ்எம்எஸ் தகவல் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டார்.
ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சதீஷ்(22) விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
கோவையில் வேலை பார்த்தபோது திருப்பூரைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் கீர்த்தனாவை(21) காதலித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கீர்த்தனாவை அவரது குடும்பம் ஒதுக்கி வைத்துவிட்டது.
ஆனால், திருமணத்துக்குப் பின்னர் தான் சதீஷின் உண்மை உருவம் கீர்த்தனாவுக்குத் தெரிய வந்தது.
சதீஷ் ஒரு சந்தேக பேயாக இருந்துள்ளார். வேலைக்கு செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனாவின் மீது சந்தேகப்பட ஆரம்பித்தார்.
இதனால் வேலைக்கு செல்லும் போது கீர்த்தனாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிடுவாராம். தினமும் இரவு தான் வீடு திரும்புவார். இதனால் பகல் எல்லாம் வீட்டில் சிறை இருந்துள்ளார் கீர்த்தனா.
மேலும் அக்கம்பக்கத்து வீட்டினருடனும் பேச விடாமல் வைத்துள்ளார். செல்போனையும் சார்ஜ் செய்து தரவில்லை. தனது குடும்பமும் உறவினர்களும் தன்னை ஒதுக்கி வைத்துவிட்ட நிலையில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார் கீர்த்தனா.
இந் நிலையில் எப்படியோ கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ராஜேந்திரனின் செல் நம்பரை அறிந்த கீர்த்தனா, ப்ளீஸ் ஹெல்ப் மீ என மெசேஜ் அனுப்பியுள்ளார். (எஸ்எம்எஸ் அனுப்ப மட்டுமே அதில் கரன்சி இருந்துள்ளது)
இதைப் பார்த்த ராஜேந்திரன் உடனடியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, கீர்த்தனாவை மீட்க உத்தரவிட்டார்.
இதையடுத்து எஸ்எம்எஸ் மூலமே கீர்த்தனாவுடன் பேசிய போலீசார் அவர் சிறை வைக்கப்பட்ட வீட்டை அறிந்து கீர்த்தனாவை மீட்டனர்.
சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications