தாத்தா தோற்றார் பாட்டி ஜெயித்தார்!
ஜெய்ப்பூர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத் தோல்வியடைந்ததால் அவரது கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதேசமயம், பிரதீபா பாட்டீலின் கணவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் படு உற்சாகமாக உள்ளனர்.
![]() |
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள கச்சரியவாஸ்தான் ஷெகாவத்தின் சொந்த ஊராகும். ஷெகாவத் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி இந்தக் கிராம மக்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.
சிறப்பு வழிபாடுகளுக்கும், ஹோமங்களுக்கும் பஞ்சம் இல்லை. ஆனால் அவர்களது பிரார்த்தனைகளை மீறி ஷெகாவத் தோற்று விட்டார். இதனால் ஷெகாவத் கிரா மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
![]() |
எப்படியும் ஷெகாவத் குடியரசுத் தலைவராகி விடுவார் என்ற நினைப்பில் அவர்கள் மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் மண் விழுந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷெகாவத் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது மிகப்பெரிய அளவில் விழா எடுத்துக் கொண்டாடினர்.
ஆனால் அவர் இப்போது தோல்வியடைந்துவிட்டதால் கச்சரியாவாஸ் கிராமத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது.
தாத்தா தோற்றார் பாட்டி ஜெயித்தார்
அதே சமயம், அதே சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டிலசலால் கிராமம் படு உற்சாகமாக உள்ளது. இந்தக் கிராமம்தான், பாட்டீலின் கணவரின் சொந்த ஊராகும்.
தங்களது ஊரைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராகியுள்ளதால் இந்த கிராம மக்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். எங்கள் மாவட்ட தாத்தா தோற்றாலும் கூட பாட்டி ஜெயித்து விட்டார். எப்படியோ எங்களது மாவட்டம் குடியரசுத் தலைவரைக் கொடுத்த மாவட்டமாகி விட்டது என்ற பெருமையில் அவர்கள் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications