ஆப்கான் முன்னாள் மன்னர் ஷகீர் ஷா மரணம்
காபூல்:ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் முகம்மத் ஷகீர் ஷா மரணமடைந்தார் (வயது 92).
1933ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை ஷா ஆண்டு வந்தார். அப்போது நாடு அமைதியாகவும் வளமாகவும் இருந்தது.
![]() |
இந் நிலையில் 1973ம் ஆண்டு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால் அவர் இத்தாலியில் அடைக்கலம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தானில் ஊடுருவின. ரஷ்யாவை எதிர்த்து மதவாதிகள் நடத்திய போரில் அவர்களுக்கு அமெரிக்காவும் பாகிஸ்தானும் உதவின.
இதையடுத்து ரஷ்யப் படைகள் திரும்பின. ஆனால், நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது. ஆளுக்கு ஒரு பகுதியைக் கட்டுப்படுத்திக் கொண்டு நாட்டை பிளவுபடுத்தினர் பல தலைவர்கள்.
இந் நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவோடு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து நாட்டையே நாசமாக்கினர். அமெரிக்காவால் தலிபான்கள் ஆட்சி ஒழித்துக் கட்டப்பட்ட பின் இடைக்கால அதிபராக 2002ம் ஆண்டில் ஷா நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தேர்தல் நடந்து அதிபராக முகம்மத் கர்ஸாய் தேர்வானார். தலிபான்கள் ஒழித்துக் கட்டப்பட்ட பின் ஆப்கானிஸ்தானிலேயே குடியேறினார் ஷா. இந் நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்.













Click it and Unblock the Notifications