பாட்டியை டைவர்ஸ் செய்ய மகனுக்குபின்லேடன் குடும்பம் நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

லண்டன்:சமீபத்தில் தான் கல்யாணம் செய்து கொண்ட 51 வயது இங்கிலாந்து பெண்ணை விட்டு உடனடியாக விலக வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கப்படுவாய் என தன்னை தனது குடும்பத்தினர் நெருக்குவதாக, பாட்டியை மணந்த பின் லேடனின் 27 வயது மகன் ஒமர் பின் லேடன் கூறியுள்ளார்.

ஒசாமா பின் லேடனின் 17 மகன்களில் ஒருவர்தான் ஒமர் பின்லேடன். இவருக்கு வயது 27. ஆனால் சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேன் பிலிக்ஸ் பிரவுன் என்ற 51 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்டார் ஒமர்.

பிரவுன், ஏற்கனவே 5 முறை விவாகரத்து செய்த வரலாறு கொண்டவர். இவர்களின் இந்த நூதனத் திருமணம் பின் லேடன் குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதாம்.

பிரவுனை விட்டு விலகி விட வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தை விட்டு விலக்கி வைத்து விடுவோம் என ஒமரை அவரது குடும்பத்தினர் நெருக்க ஆரம்பித்துள்ளனராம்.

இதுகுறித்து ஒமர் பின் லேடன் இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், எனது குடும்பம் மற்றும் சமூகத்தில் பிரவுனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரவுனை நான் கல்யாணம் செய்து கொண்டது தவறு, மோசமான செயல் இது என்று எல்லோரும் கூறுகிறார்கள். எனது திருமணத்தை யாருமே அங்கீகரிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது, நான் அவரை நேசிக்கிறேன்.

பிரவுனை விட்டு நான் விலகி விட வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கி வைத்து விடுவோம் என எனது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் பிரவுனை நான் விவாகரத்து செய்யப் போவதில்லை.அவருடன் சேர்ந்து அங்கீகாரத்திற்காகப் போராடப் போகிறேன் என்று கூறியுள்ளார் ஒமர்.

ஒமர் தற்போது சவூதியில் தனது முதல் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். பிரவுன் இங்கிலாந்தில் உள்ளார். இருவரும் தினமும் தெலைபேசியிலும் சேட்டிகிலும் தான் தொடர்பு கொள்கின்றனராம்.

ஆனால் இப்படியே இன்டர்நெட்டிலும் சாட்டிலைட் போனிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க முடியாது. விரைவில் பிரவுன் இணைந்து வசிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் ஒமர்.

ஒமரின் 2வது கல்யாணத்திற்கு அவரது முதல் மனைவியும், மகனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+