மனம் போல் நடக்கும் மணல் கொள்ளை- டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

நெல்லை:நெல்லை தாமிரபரணி ஆற்றை காக்க போராட்டம் நடத்துவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கே.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

கல்வி, வேலை வாய்ப்புகளில் சமூக மற்றும் கல்விரீதியாக பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Krishnaswammy

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதம் பழங்குடியினருக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களை பொறுத்தளவு 18 சதவீதம் என ஆவணப்படி இருக்கிறதே தவிர முறையாக செயல்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் நிரந்தரமாகவும், 7 லட்சம் பேர் தற்காலிக பணியாளராகவும் உள்ளனர். தமிழகத்தில் 110 அரசுத் துறைகள் உள்ளன.

ஆனால், 65 துறைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர் கூட உயர் பதவியில் இல்லை.

மேலும் எஸ்.சி, எஸ்.டி பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்த உள்ளோம். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீடின் முன்பாகவும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

தாமிரபரணி ஆற்றுக்காக போராட்டம்:

தாமிரபரணியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு, கடத்தப்படுவதால் அதன் நீர்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.

அனைத்து கரையோர கிராம மக்களை ஒன்று திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மணல் கொள்ளை இங்கு மனம் போல போகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+