இலங்கையில் திடீர் தேர்தல் வராது: ராஜபக்ஷே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று அதிபர் மகிந்தா ராஜபக் ஷே கூறியுள்ளார்.

Rajapakshe

மத்திய இலங்கையில் உள்ள நாவல்பிடியா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், விடுதலைப் புலிகள் வசமிருந்த பல முக்கியப் பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் அரசுக்கு மக்களிடையே செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இருப்பினும் இதை பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணமும் எனக்கு இல்லை.

நாங்கள் இப்போது தேர்தல் நடத்தினால் மிகப் பெரிய வெற்றி எங்களுக்குக் கிடைக்கும். ஆனால் பொதுமக்களின் பணத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. உரிய நேரத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றார் ராஜபக் ஷே.

தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராஜபக் க்ஷே 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்தார்.

நாடாளுமன்றத்தில் அதிபரின் இலஙகை சுதந்திராக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. எதிர்க்கட்சிகளிலிருந்து தாவியுள்ள 17 எம்.பிக்களின் ஆதரவுடன் தான் ஆட்சியை நடத்தி வருகிறார் ராஜபக் ஷே.

இவர்களில் 2 பேர் கடந்த வாரம் எதிர்க்கட்சிக்குத் தாவியதால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+