பிரிந்து போன மனைவி-நூற்றுக்கணக்கில் சிகரெட்புகைத்து, தூக்கில் தொங்கிய கணவர்
கரூர்:மனைவி தன்னை விட்டுப் பிரிந்து போன ஏக்கத்தில் 150 சிகரெட்டுக்களை தொடர்ந்து புகைத்து, மனம் வெறுத்து, தூக்கில் தொங்கி இறந்து போனார் கணவர்.
கரூர் எல்.ஜி. நகரைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பொன்னம்மா. இவர்களுக்கு கல்யாணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு சூர்யா என்ற குழந்ைத உள்ளது.
கரூரில் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார் காமராஜ். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் காமராஜுக்கும், பொன்னம்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இந் நிலையில் சண்டை போட்டுக் கொண்டு கணவரை விட்டுப் பிரிந்து தனது தாயாரின் வீட்டுக்குப் போய் விட்டார் பொன்னம்மா.
ஏற்கனவே தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரிவு என மனம் உடைந்த காமராஜ் ஏராளமான சிகரெட் பாக்கெட்டுக்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
150 சிகரெட்களை தனியாக அமர்ந்து வரிசையாக புகைத்து மயங்கியுள்ளார். பின்னர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications