சிங்கப்பூர்-தவிக்கும் தமிழர்கள்- மீட்க நடவடிக்கை
டெல்லி:சிங்கப்பூரில் வேலைக்காக சென்று தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வேலை வாங்கித் தருவதாக கூறி ஏஜெண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள்மற்றும் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் முகர்ஜி.
பேட்டியின்போது உடனிருந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில்,
சிங்கப்பூரில் வாடி வரும் தமிழர்களை மீட்பது குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துரைத்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். அவரும் தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications