ராமர் பாலத்தை காக்க எந்த தியாகமும்செய்யத் தயார்: தொகாடியா

Subscribe to Oneindia Tamil

மதுரை:ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறாம் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறினார்.

Togadia

ராமர் பாலத்தை பாதுகாப்பது தொடர்பாக மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் தலைமையில் ராமர் பால மக்கள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல இந்து அமைப்புகள் பங்கேற்றன.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் நடந்த இந்த மாநாட்டில் தொகாடியா பேசுகையில்,

புராதண சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ராமேஸ்வரத்தை புனிதத் தீவாக பிரகடனம் செய்ய வேண்டும்.

ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறாம் என்றார்.

ஆகஸ்ட் 12ல் ராமேஸ்வரத்தில், துறவிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் எனவும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இம் மாநாட்டையொட்டி மதுரையில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+