பெண் புரோக்கரைக் கொன்ற பாடிகார்ட் கைது
புதுச்சேரி:புதுச்சேரியில் பெண் திருமண புரோக்கரை அவருடைய பாடிகார்டுகளே கொலை செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரத்தினம் (38). கணவரை இழந்த இவர் திருமண புரோக்கராக இருந்தார்.
கடந்த 6ம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இதையடுத்து இவரது தாயார் போலீஸில் புகார் கொடுத்தார்.
தனது புகாரில், ரத்தினத்திற்குப் பாதுகாப்பாக 4 பாடிகார்டுகள் இருந்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாடிகார்டுகளில் ஒருவரான புவன் என்கிற புவனீதரணை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்த பாடிகார்டுகள்தான் ரத்தினத்தைக் கொலை செய்து விட்டது தெரிய வந்தது.
பாடிகார்டுகளுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக ரத்தினம் ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டதால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று விட்டதும் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட ரத்தினத்தின் உடலை கழிப்பறை ஒன்றின் செப்டிக் டேங்க்கில் அவர்கள் போட்டிருந்தனர். அழுகிய நிலையில் இருந்த ரத்தினத்தின் உடலை போலீஸார் கைப்பற்றினர்.
புவன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமண புரோக்கர் எதற்கு 4 பாடிகார்டுகளுடன் வலம் வந்தார் என்று புரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications