கல்யாணம் ஆகாதவருக்கு சாராயம் கொடுத்துகு.க. ஆபரேசன்!!!
கிருஷ்ணகிரி:திருமணம் ஆகாத வாலிபருக்கு பாக்கெட் சாராயத்தை வாங்கிக் கொடுத்து குடும்ப கட்டுப்பாடு செய்த சுகாதார ஆய்வாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியை அடுத்த கெலமங்கலத்தச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி வெங்கடேஷ் (39). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டுள்ளதை அறிந்தனர். இதையறிந்து வெங்கடேஷ் அதிர்ந்தார்.
இதையடுத்து ஊர் திரும்பிய வெங்கடேஷ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில்,
2 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் சுகாதார ஆய்வாளராக இருந்தவர் எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கி கொடுத்தார். நானும் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்தபோது என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு வைத்து எனக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்து விட்டார்.
எனது வாழ்க்கையை பாழாக்கிய அந்த சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரின் பெயர் வெங்கடேஷூக்கு தெரியாததால், அவரைப் பற்றி சுகாதார நிலையத்தில் விசாரித்து வருகிறார்கள்.
வெங்கடேஷூக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்ட ஜனநாயக இளைஞர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications