கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் வரும் 30,31ம் தேதிகளில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தின் 10வது மாடியில் நடக்கும் இம் மாநாட்டில் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு, நக்ஸல்கள் பிரச்சனை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இதில் அனைத்து மாநில கலெக்டர்கள், டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜிக்கள், எஸ்.பிக்கள், கமிஷ்னர்கள், அனைத்துத் துறைகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாவட்டம் வாரியாக இலவச கலர் டிவி, சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம், புதிய குடும்ப அட்டை வழங்குவது மற்றும் இலவச மனைப் பட்டா வழங்குவது குறித்தும் ஆலோசனை நடக்கவுள்ளது.

சிறுசேமிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் கேடயம் வழங்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+