கன்னியாகுமரி மீனவர்கள் வலையில் சிக்கிய2 ராக்கெட் குண்டுகள்
நாகர்கோவில்:கன்னியாகுமரி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் வலையில் ராக்கெட் குண்டுகள் சிக்கின.
கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வம் தன் விசைப்படகில் சின்னமுட்டம் துறைமுகம் பகுதியில் இருந்து 10 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.
![]() |
உவரியிலிருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களின் கனமான பொருள் சிக்கியது. 10 பேரும் சேர்ந்து இழுக்க பெரும்பாடுபட்டுள்ளனர். வலையை மேலும் இழுக்க முடியாததால் படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
சின்னமுட்டம் துறைமுகம் பகுதிக்கு வந்து சேர்ந்தவுடன் பிற மீனவர்களின் உதவியுடன் வலையை கரையில் இழுத்துப் போட்டனர்.
அப்போது வலையில் இரண்டு பெட்டிகள் இருந்தன. பெட்டிகளைத் றந்து பார்த்தபோது அதில் தலா ஒரு ராக்கெட் குண்டுகள் இருந்தன. இதையடுத்து மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு வந்து ராக்கெட் குண்டுகளை கைப்பற்றி சென்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், இவை விடுதலைப் புலிகளுக்கு கடத்திச் செல்லப்பட்டபோது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என்றனர்.
இப்போது இந்த விசாரணை கியூ பிராஞ்ச் போலீசாரிடம் தரப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications