ஹனீப் நாடு திரும்ப அனுமதி: இன்றேஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்புகிறார்
சிட்னி:தீவிரவாதிகளுக்கு உதவியாக கைது செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஹனீப்பை நாடு திரும்ப ஆஸ்திரேலியா அனுமதித்துள்ளது. ஆனால், அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவில் மீண்டும் பணியாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் கேட்டுக் கொண்டனர் என்பதற்காக அப்பாவியான ஹனீபைப் பிடித்து உள்ளே போட்டது ஆஸ்திரேலியா.
அத்தோடு நிறுத்தாமல் நம் ஊர் போலீஸ் மாதிரியே கண்டபடி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். தீவிரவாதத்துக்கு துணை போனதாகக் கூறி அவர் மீது அடுத்தடுத்து 12 வழக்குகள் போடப்பட்டன. ஆனால், எந்த புகாருக்கும் ஆதாரம் இல்லை.
இதனால் அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதையடுத்து ஹனீப்பின் விசாவை ரத்து செய்தார் ஆஸ்திரேலிய குடியுறவுத்துறை அமைச்சர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அரசின் இனவெறி மீண்டும் உறுதியானது.
இந் நிலையில் எந்த புகாருக்கும் ஆதாரம் இல்லாமல் வழக்குப் போட்ட ஆஸ்திரேலிய போலீஸ் மீது அந் நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் போலீசாரையும் அரசையும் எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டன. மேலும் ஹனீப்புக்கு ஆதரவான பேரணிகள் நடந்தன.
![]() |
மிகத் தாமதமாக விழித்துக் கொண்ட இந்திய அரசும் வேகமாக களமிறங்கியது. ஹனீப்பின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என நேரடியாகவே ஆஸ்திரேலிய பிரதமரிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டார் பிரதமர் மன்மோகன் சிங்.
மேலும் டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரையும் அழைத்து தனது கண்டனத்தை இந்தியா தெரிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு செய்வறியாது திகைத்தது. பழியை போலீஸ் மீது போட்டது.ஆனால், பதிலுக்கு போலீசார் அரசைப் பழித்தனர்.
இதையடுத்து தனது தவறுகளை மறைக்க காமன்வெல்த் தலைமை சட்ட நிபுணரை வரவழைத்தது. ஆனால், அவர் ஹனீப்புக்கு எதிராக எந்த வழக்குக்கும் ஆதரமில்லை என்று கூறி வழக்குகளை மொத்தமாக திரும்பப் பெற உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. ஹனீப் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவரது விசா ரத்தாகிவிட்டதால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் விசா கிடைத்தவுடன் ஆஸ்திரேலியாவை விட்டு உடனடியாகக் கிளம்பிவிட முடிவு செய்துள்ளதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹனீப் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் அவர் நாடு திரும்ப ஆஸ்திரேலியா இன்று அனுமதி அளித்தது. அதே நேரத்தில் அவரது பணி விசா ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் இனிமேல் அவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றவே முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹனீப் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டதால் அவரது வொர்க் விசாவை மீண்டும் வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கோரியுள்ளது.
இதற்கிடையே இன்றே ஹனீப் இந்தியா கிளம்புகிறார். அவருடன் அவரது வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோவும் பெங்களூர் வருகிறார். இவர் தான் ஹனீப்பின் விடுதலைக்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்குச் செல்லும் முன் பத்திரிக்கையாளர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு ஏன் இவ்வளவு பயம்













Click it and Unblock the Notifications