நக்சல்களை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு ஜூலை
பெரியகுளம்:பெரியகுளம் பகுதியில் பிடிபட்ட நக்சலைட்டுகள் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி பெற்ற நக்சல்களில் 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களோடு பயிற்சி பெற்ற மற்ற 5 நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய நக்சல்களை தேடும் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள மலைப் பகுதிகளில் நடந்து வருகிறது. அதிரடிப் படையினரும் போலீசாரும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிடிபட்ட நக்ஸல்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கள் குழுவில் இணைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
பிடிபட்ட நக்சல்களான வேல்முருகன் உட்பட 3 பேரையும் நேற்று பெரியகுளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு காவல் நீடிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது போலீசார் நக்சல்கள் 3 பேரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் நீதிபதி போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி தர மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications