அமெரிக்காவில் 2 செய்தி நிறுவனஹெலிகாப்டர்கள் மோதல்- 4 பேர் பலி
அரிசோனா:அமெரிக்காவில் போலீசார் ஒரு காரை விரட்டிச் சென்றதை படம் பிடிக்கச் சென்ற இரண்டு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின. இதில் 4 பேர் பலியாயினர்.
அரிசோனாவில் பாலைவனப் பகுதியில் பீனிக்ஸ் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
![]() |
ஒரு நபரைத் தாக்கிவிட்டு காரைத் திருடிச் சென்ற நபரை போலீசாரின் கார்கள் விரட்டிச் சென்றன. காரை ஓட்டியவன் படு வேகத்தில் ஓட்டியதால் இந்த சேஸ் நெடு நேரம் நீடித்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஏபிசி செய்தி நிறுவனம் தனது வீடியோகிராபரையும் நிருபர்-கம்-பைலட்டையும் ஹெலிகாப்டரில் அனுப்பியது.
அதே போல சேனல் 3 நிறுவனத்தின் இன்னொரு ஹெலிகாப்டரும் இந்த சேஸை படம் பிடிக்க வந்தது.
இரு ஹெலிகாப்டர்களும் காரை போலீசாரின் வாகனங்கள் விரட்டிச் செல்வதை படம் பிடித்துக் கொண்டிருந்தன. அவர்களைத் தொடர்ந்து போலீசாரின் ஹெலிகாப்டரும் வந்தது.
அப்போது இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்களும் திடீரென வானில் மோதிக் கொண்டன.
இரு ஹெலிகாப்டர்களும் வெடித்துச் சிதறி கீழே விழுந்தன. அதிலிருந்த 4 பேரும் பலியாகினர்.
காரை திருடிச் சென்றவனை பின்னர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications