சென்னை நகருக்கு கிருஷ்ணா நீர்:ஆந்திர முதல்வர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட ஆந்திரம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையைத் தொடர்ந்து தண்ணீரைத் திறந்துவிட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 20ம் தேதி கருணாநிதி கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள ரெட்டி, சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications