தீண்டாமையை ஒழிக்க மக்கள் இயக்கமே சரி: பழ.நெடுமாறன்
கடையநல்லூர்:கடையநல்லூர் மங்கலாபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் வாழ்வுரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களின் ஜீவதார தொழிலான விவசாய தொழிலுக்கு கேடு விளைவுக்கும் மணல் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வீரன் சுந்தரலிங்கனார் தியாகத்தை இளைய தலைமுறையினர் உணரும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் பேசுகையில்,
தமிழகத்தில் தமிழர்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பூர்வ குடி மக்களான உழவு தொழில் செய்யும் மக்கள் வாழ வழியில்லாமல் தவிக்கிறார்கள். இங்குள்ள விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
பிறப்பால் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தக்கூடிய முறை இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. உலக நாடுகளில் இதுபோன்ற ஒரு செயலை வேறு எங்கும் பார்க்க முடியாது. 1955-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த 2 சட்டங்களும் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
இதை செயல்படுத்த வேண்டிய நீதித்துறையும், நிர்வாக துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளன. எனவே மிகப்பெரிய மக்கள் இயக்கம் மூலம் தான் நமது உரிமைகளைப் பெற முடியும் என்றார்.
வல்லநாடு சாது சிவா சுவாமிகள் பேசுகையில்,
தேவர் இன மக்களும், தேவேந்திர குல மக்களும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே முத்துராமலிங்க தேவரும், இமானுவேலும் சமுதாய மேம்பாட்டிற்கு பாடுபட்டது போல நாம் இனிமேல் ஒற்றுமையாக பாடுபட்டு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சுய நலத்திற்காக பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு நம்மை பிரித்தனர். இனி நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார்.
மாநாட்டில் ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications