நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அடிதடி
செங்கோட்டை:செங்கோட்டை நகராட்சிக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலரை, திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமும், அவசரக் கூட்டமும் தலைவர் ரகீம் தலைமையில் 30-ந் தேதி காலை நடந்தது.
கூட்டம் தொடங்கிய உடன் எழுந்த திமுக கவுன்சிலர்கள் கல்யாணி, பாஞ்ச் பீர், சேக் அப்துல் காதர் ஆகியோர்,
பேருந்து நிலையத்தின் உட் பகுதியில் கட்டப்பட்ட கடையை அப்புறப்படுத்திட ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந் நிலையில் கடைகள் மீண்டும் ஏலம் விடப்பட்டுள்ளன. இது தவறான செயல் என்று கூறினர்.
இதைக் கேட்டதும் நகராட்சித் தலைவர் ரகீம் ஆத்திரமடைந்தார். திமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
வாக்குவாதம் முற்றவே நகராட்சித் தலைவர் ரகீம், திமுக கவுன்சிலர் கல்யாணியை அசிங்கமாக பேசியபடி தாக்கப் பாய்ந்தார்.
அவரைத் தடுக்க திமுக கவுன்சிலர் சேக் அப்துல் காதர் ஓடி வந்தார். ஆனால் அவரையும் அடிக்க முயன்றார் ரகீம். அதில் காதர் கீழே விழுந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்படவே தலைவரை பிற கவுன்சிலர்கள் அவரது அறைக்கு அழைத்து சென்று விட்டனர்.
திமுக சேர்மனே, திமுக கவுன்சிலர்களை தாக்க முயன்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications