மலேசியா: கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கிஃபிரிட்ஜில் வைத்த மனைவி
கோலாலம்பூர்:கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார்.
அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார்.
இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்துதான் (ஃபிரிட்ஜ்) வாசனை வருவது தெரிய வந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேபாது அதில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர்.
அந்தப் பிணம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு பாலிதீன் பைகளில் போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலையைச் செய்தது அந்த ஆணின் மனைவி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொல்லப்பட்ட நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். கொலை செய்த அந்தப் பெண் சரவாக் என்ற இடத்தைச் சேர்ந்தவர். விமானப் பணிப்பெண்ணாக அவர் பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து தீவிர வேட்டை நடத்திய போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். அப்பெண்ணுடன், அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. காதலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கள்ளக் காதலில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications