போலீஸ் மிரட்டல்- பெண் வக்கீல் மாயம்!கண்டுபிடிக்க கோரி சகோதரி வழக்கு
சென்னை:என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவதாக போலீஸாரால் மிரட்டப்பட்ட பெண் வக்கீலைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துக் கொடுக்கமாறு போலீஸுக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மூத்த சகோதரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதா.
கடந்த மாதம் 25ம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்காக கவிதா சென்னை வந்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை. ஊருக்கும் திரும்பவில்லை. சென்னையிலும் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
இதையடுத்து அவரது சகோதரி அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய போலீஸார் மீது கவிதா பல்வேறு புகார்களைக் கூறி வந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கும், எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.
என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டல்கள் வந்ததால் தனக்குப் பாதுகாப்பு கோரி கடந்த 2005ம் ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் கவிதா மனு தாக்கல் செய்தார்.
அதன்படி அவருக்கு பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கவிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
இந் நிலையில்தான் கவிதா காணாமல் போயுள்ளார் என்று தனது மனுவில் கூறியிருந்தார் அமுதா.
அமுதாவின் மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications