சங்கரநாராயணன் கோவில் ஆடி தபசு
சங்கரன்கோவில்:திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ் மிக்க சங்கரநாராயணன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா சிறப்புற நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு சங்கர நாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
29-ந் தேதி ஆடித் தபசு சிறப்பாக நடந்தது. இதற்கான நிகழ்ச்சிகள் காலையிலேயே தொடங்கின. கோமதியம்மாள், சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணர் ஆகியோருக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
பின்னர் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழந்தருளும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் அன்னை கோமதியம்மனுக்கு சங்கரலிங்க சாமி, சங்கர நாராயணராக தபசு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. பின்னர் இரவிலும் இதே வைபவம் நடைபெற்றது.
இந்த ஆடித்தபசு காட்சியினை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கனக்கானோர் சங்கரன்கோவிலில் குவிந்தனர்.
தபசு காண வந்த பக்தர்களிடம் நகராட்சி குத்தகைதாரர்கள் சகட்டு மேனிக்கு வசூல் வேட்டை நடத்தி பக்தர்களை சிரமத்திற்குள்ளாக்கினர்.
கோவில் சுற்று பிரகாரத்தில் வாகனங்களை நிறுத்த தேவசம் போர்டு தனி ஏலம் விட்டுள்ளது. ஆனால் நகராட்சி குத்தகைதாரர் வணிக வாகனங்களுக்கு மட்டும்தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். அதை விடுத்து ஊருக்குள் நுழையும் வாகனங்களுக்கெல்லாம் இஷ்டம் போல் முறைகேடான முறையில் கட்டணம் வசூலித்ததாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆடித் தபசு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடபப்ட்டிருந்தது.800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications