வராத ரயில்: திருவள்ளூர்-ஆவடியில் ஆயிரக்கணக்கானபயணிகள் ரயில் மறியல்
சென்னை:சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று சரியாக இயக்கப்படாததால் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8 மணிக்கு அரக்கோணத்திலிருந்து ஆவடிக்கு வர வேண்டிய மின்சார ரயில் வரவில்லை.
![]() |
இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் பெரும் கொதிப்படைந்தனர்.
அந்த மார்க்கமாக அப்போது சென்னைக்கு வந்து கொண்டிருந்த வெளியூர் ரயில்களை மறித்து நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
இதேபோல, திருவள்ளூர், அரக்கோணம், பட்டாபிராம் ஆகிய நிலையஙகளிலும் பயணகிள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக சென்னைக்கு வர வேண்டிய வெளியூர் ரயில்கள் அரக்கோணத்தைத் தாண்ட முடியாமல் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
மக்கள் போராட்டம் மற்றும் ரயில்வே அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கால், சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.













Click it and Unblock the Notifications