துபாய்-அஸ்கான் சமூக கூடத்தில் மார்க்க சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
துபாய்:துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வாரந்தோறும் இஸ்லாமிய மார்க்க தமிழ் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வாரந்தோறும் மார்க்க சொற்பொழிவு நடந்து வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமை இரவுகளில் இஷா தொழுகைக்கு பின்னர் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெறும் சொற்பொழிவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேசர்ந்த ஆலிம் மெளலவி ஏ. சீனி நைனார் முகம்மது தாவூதி சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு 050 4255256 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முகம்மது மரூப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications