தாக்குதல்: ஹனீப்புக்கு முன்பே தெரியும்என்கிறார் ஆஸி. அமைச்சர்: மறுக்கிறார் ஹனீப்
மெல்போர்ன்:இங்கிலாந்து தீவிரவாத தாக்குதலைப் பற்றி இந்திய டாக்டர் ஹனீப்புக்கு முன்பே தெரியும் என்றும், அது தொடர்பாக பெங்களூரில் உள்ள தனது சகோதரருடன் ஹனீப் இன்டர்நெட்டில் சேட் செய்த ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஆஸ்திரேலிய குடியுரிமைத்துறை அமைச்சர் கெவின் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார்.
ஆனால், இதை ஹனீப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மெல்போர்னில் அமைச்சர் ஆன்ட்ரூஸ் பேசுகையில்,
![]() |
டாக்டர் ஹனீப் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டால் இந்த வழக்கில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் சில முக்கிய ஆதாரங்களை மட்டும் வெளியிடுகிறேன்.
கடந்த மாதம் 2ம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருந்து புறப்படுவதற்கு முன், பெங்களூரில் உள்ள தனது சகோதரருடன் ஹனீப் சேட்டிங்கில் உரையாடியுள்ளார். அதில், ஹனீப்பின் சகோதரர், உன்னைப்பற்றி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையா, நீ எப்போது ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிகிறாய் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு ஹனீப், இன்று நான் புறப்படுகிறேன். என் மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக சொல்லி விடுப்பில் வருகிறேன் என பதில் அளித்துள்ளார்.
இதிலிருந்து இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் சதி குறித்து டாக்டர் ஹனீப்புக்கு ஆரம்பத்திலேயே தெரியும் என்ற சந்தேகம் ஆஸ்திரேலிய போலீசாருக்கு எழுந்துள்ளது. அதனால் தான் அவருடைய விசாவை ரத்து செய்தேன்.
ஹனீப் தன் குழந்தையை பார்க்க இந்தியா செல்லப்போவதாக மருத்துவமனையில் கூறியது உண்மையான காரணம் கிடையாது. அவரின் சிம் கார்டு இங்கிலாந்தில் சிக்கி இருப்பதன் மூலம், இங்கிலாந்தில் நடந்துள்ள சம்பவங்களில் தனக்கிருந்த தொடர்பு தொடர்பு வெளியாகிவிடும் என பயந்து அவசரமாக ஒன்-வே டிக்கெட் மூலம் இந்தியா செல்ல இருந்துள்ளார். மீண்டும் அவர் ஆஸ்திரேலியா திரும்புவதற்கு விமான டிக்கெட் வாங்கவில்லை.
இந்த வழக்கு முடிந்துவிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடக்கும் என்றார்.
இந் நிலையில் இன்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய ஹனீப்,
அமைச்சர் வெளியிட்டுள்ள சேட்டிங் விவரம் முழுமையானது அல்ல. அதில் தங்களுக்கு சாதகமாக அமையும் வகையில் சில பகுதிகளை மட்டும் வெளியிட்டுள்ளார். சேட்டிங்கை முழுமையாக வெளியிட்டால் தான் உண்மை புரியும். அைத ஏன் அமைச்சர் வெளியிட மறுக்கிறார் என்று தெரியவில்லை.
இது விஷயமாக நான் மேலும் பேச எனது வழக்கறிஞர்கள் தடை போட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே பெங்களூர் போலீசாரும், தீவிரவாத ஒழிப்புப்படை போலீசாரும் டாக்டர் ஹனீப்பிடம், கபீல் மற்றும் சபீல் சகோதரர்களை பற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரிடம் இன்று அல்லது நாளை விசாரணை நடத்த இருப்பதாக பெங்களூர் நகர இணை கமிஷனர் கோபால் பி.ஹொசூர் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications