ஆசிரியர் இல்லாத பள்ளி-பாடம் நடத்திய எம்எல்ஏ
கரூர்:கரூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் வராததால் எம்எல்ஏ பாடம் நடத்தி அசத்தினார்.
கரூர் அருகே உள்ளது மாயனூர் கிராமம். இங்குள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 150 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு அரசு விதிகளின்படி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் என 4 பேர் இருக்க வேண்டும்.
ஆனால் தலைமை ஆசிரியரும், பெண் ஆசிரியர் ஒருவரும் மட்டுமே இருந்தனர்.
அந்தப் பெண் ஆசிரியரும் வேறொரு பள்ளிக்கு மாறுதல் வாங்கி சென்றுவிட்டார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் மட்டுமே 150 மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று அவரும் தனது சொந்த அலுவல் காரணமாக பள்ளிக்கு வராததால் பள்ளி மூடப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
பெற்றோர்களின் பள்ளி முற்றுகையை அறிந்த அந்த தொகுதி திமுக எம்எல்ஏ காமராஜ் பள்ளிக்கு சென்று பெற்றோரை அமைதிப்படுத்தினார்.
பின்னர் தானே அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தினார்.
எம்எல்ஏ பள்ளிக்கு வந்து பாடம் நடத்தியது, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிந்து உடனே வேறொறு ஆசிரியர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
வேறு ஆசிரியர் வந்தபின்பு தான் எம்எல்ஏ காமராஜ் அந்த இடத்தை விட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications