3 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொலை:இளம் பத்திரிக்கையாளரும் படுகொலை
கொழும்பு:திரிகோணமலையில் நடந்த சண்டையில் 3 விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அதேசமயம், யாழப்பாணத்தில் இளம் பத்திரிக்கையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், திரிகோணமலையில், விடுதலைப் புலிகள் ஊடுறுவ முயன்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சண்டை நடந்த இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் வசமிருந்த ஐந்து டி-56 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் இணைய தளம் ஒன்றில் பயிற்சி நிருபராக பணியாற்றி வந்த 22 வயது இளைஞரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்று கொலை செய்து பிணத்தை தெருவில் போட்டு விட்டுச் சென்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுவரை 11 தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications