டாடா தொழிற்சாலையை தொடங்க கோரிமத்திய அமைச்சர் ராதிகா-எம்எல்ஏக்கள் மனு
நெல்லை:தமிழக அரசால் கைவிடப்பட்ட டாடா தொழிற்சாலையை உடனே தொடங்க வேண்டும் என திமுக மத்திய அமைச்சர் ராதிகா செல்வி தலைமையில் எம்எல்ஏக்கள் இன்று நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை நிறுவனம் அமையவிருந்தது.
ஆனால் இதற்கு அதிமுக, பாமக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாலும்,
இந்தப் பகுதியில் அரிய தாதுப் பொருளை அள்ளி கொள்ளை லாபம் அடித்து வரும் ஒரு நபரும் போராட்டத்தை தூண்டிவிட்டதாலும் தொழிற்சாலையை தொடங்குவது பற்றி பொது மக்களிடம் கருத்து கேட்ட பின்பே முடிவெடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந் நிலையில் நெல்லை தொகுதிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, மேயர் சுப்பிரமணியன், திமுக எம்எல்ஏக்களான மாலைராஜா, அப்பாவு, ஆகியோர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் டாடா தொழிற்சாலையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications