தேயிலை விலை: கோத்தகிரியில் அதிமுக போராட்டம்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவார். கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டு அண்ணா ஸ்டேடியத்தில் முடிவடையும்.
அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும். அதற்கு கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குவார். நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகிப்பார்.
இந்தப் போராட்டத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இந்தப் பேரணியை பிரமாண்ட பேரணியாக மாற்ற வேண்டும்.
தேயிலைக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தாமல் மெத்தனப் போக்கில் உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தேயிலைக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது. மேலும், வாட் வரியையும் விதித்தது. இதனால் தேயிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் இதைக் கண்டித்து அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.
தேயிலை உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யுமாறு மத்திய , மாநில அரசுகளைக் கோரியும் இந்தப் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications